தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

காற்று தர கண்காணிப்பு மையம்

தொழிற்சாலை புகைபோக்கியிலிருந்து வெளிவரும் வாயு கழிவுகளின் தரத்தையும் மற்றும் தொழிற்சாலையினை சுற்றியுள்ள காற்றின் தரத்தையும் கண்காணிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு காற்று தர கண்காணிப்பு மையத்தினை வாரியம் அமைத்துள்ளது. சிகப்பு மற்றும் 17 வகை அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், தீங்கு விளைவிக்கும் கழிவுகளை எரியூட்டும் பொது ஆலைகள் மற்றும் பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் காற்று மாசு குறித்த விவரங்கள் இம்மையத்துடன் இணைக்கப்பட்டு வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் வாயுக்களின் தன்மை, மற்றும் சுற்றுப்புறக் காற்றின் தன்மை குறிப்பிட்ட தர அளவினை மீறும் பொழுது, அத்தொழிற்சாலைக்கும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உறுப்பினர் செயலருக்கும் உடன் நிவாரண நடவடிக்கை எடுக்கும் பொருட்டு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் தானாக அனுப்பப்படும். மார்ச் 31, 2019 வரை, தொழிற்சாலைகளில் அமைந்துள்ள 430 புகைபோக்கிகள் மற்றும் 115 சுற்றுப்புற காற்று மாசு தர கண்காணிப்பு மையங்கள் ஆகியன இந்த காற்று தர கண்காணிப்பு மையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

Water Quality Watch
Data of CAAQM Stations in Graphical form