தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

மேல்முறையீட்டு ஆணையம்

மாண்புமிகு மேல் முறையீட்டு ஆணையம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்கள் தலைமையின் கீழ் இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்களை கொண்டு அரசாணை எண். 66, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேதி 7.5.2013-ன்படி அமைக்கப்பட்டது. இது 4வது தளம், CHATEAU D AMPA, எண். 37/110, நெல்சன் மாணிக்கம் சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-600029-ல் செயல்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட 1974-ஆம் ஆண்டு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 25, 26 அல்லது 27 மற்றும் திருத்தப்பட்ட 1981-ஆம் ஆண்டு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பிறப்பிக்கப்பட்ட எந்த ஒரு ஆணையையும் எதிர்த்து தொழிற்சாலைகளால் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து வைப்பதற்காக 18.10.2010 அன்று புதுடெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) அமைக்கப்பட்டது. பிரிவு 28, 29 மற்றும் 33 ஏ- படி நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974, பிரிவு 13 நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம் 1977, பிரிவு 31 காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் பிரிவு 5 சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 ன் படி, மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் / / மேல்முறையீட்டு ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் முடிவால் இடறுற்ற எந்த ஒரு நபரும், ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு சென்னையில் செயல்பட்டு வருகிறது. தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வை ஏற்படுத்துவதற்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உதவி புரிந்துள்ளது. மேலும், சென்னையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வை ஏற்படுத்துவதற்கும் வாரியம் உதவி புரிந்துள்ளது. இரண்டாவது அமர்வானது 23.3.2015 முதல் செயல்பட்டு வருகிறது. தெற்கு மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு 600005 ல் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

NGT Website Link Click Here

Committee Reports as per NGT order