தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

வாரியத்தின் செயல்பாடுகள்

நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981ன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியப் பணிகள் பின்வருமாறு:

 • நீர் நிலைகள் மாசுபடுதல் மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க, கட்டுப்படுத்திட மற்றும் குறைக்க, கூடிய ஒருமித்த விரிவான பாதுகாப்புடன் கூடிய செயலாக்கத்தினை திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்துதல்.
 • நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் குறித்த வழிமுறைகள் பற்றிய கருத்துரைகளை மாநில அரசுக்கு வழங்குதல்.
 • நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் தொடர்புடைய தகவல்களை திரட்டுதல் மற்றும் பரப்புதல்.
 • இச்சட்டம் வழி இசைவாணை வழங்க தேவையாக இருக்கக்கூடிய, மனித வழி கழிவுநீர் அல்லது தொழிற்கழிவுநீர், அதன் பணிகள் மற்றும் மனிதவழி கழிவுநீர் சுத்திகரிப்பு கூடங்கள் அல்லது தொழிற்கழிவு கூடங்கள் மற்றும் அவற்றின் திட்டங்களை சீராய்வு செய்திடல், அளவு குறிப்பீடுகள் அல்லது அமைப்பு அல்லது நீர் சுத்திகரிப்பு கூடத்தின் அமைப்பு தொடர்புடைய பணிகள், தூய்மையாக்குதல் போன்றவை மற்றும் மனித வழி கழிவுநீர் அல்லது தொழிற்கழிவுநீர் ஆகியன சுத்திகரித்து வெளியேற்றுதலுக்கான அமைப்புகள் நிறுவிட இசைவாணை வழங்குதல்.
 • காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி முறையில் மாசினை குறைக்கும் உபகரணங்களை ஆய்வு செய்து தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டுதல்.
 • குறிப்பிட்ட கால இடைவெளி எல்லைக்குள், காற்று மாசுபடும் பகுதிகள் ஆய்வு செய்தல், அதுவும் அவை தேவையெனில் காற்றின் தன்மை குறித்து கணிப்பு செய்து அதற்குரிய நடவடிக்கை எடுத்தல், அந்த இடங்களில் காற்று மாசடைதலை தடுத்தல் அல்லது குறைத்தல்.
 • தொழிற் கழிவுநீர் அல்லது குடிமுறை கழிவுநீர் ஆகியனவற்றின் அல்லது நீர் நிலைகளில் சேரும் இடத்தின் அளவுக்கேற்ப தர அளவுகளை (மாநிலங்களுக்கு இடையே ஓடும் நீரில் கலப்பதில் அல்லாமல்) அம்மாநில நீர் அமைப்பு வகைகளுக்கு ஏற்ப, வருடாந்திர கால அளவுக்கேற்ப அக்கழிவுநீர் வெளியேற்றும் தர அளவுகளை நிர்ணயம் செய்தல், மாற்றி அளவிடுதல் அல்லது நீக்குதல் செய்தல்.
 • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் கலந்தாராய்ந்து தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையின் தரம் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகையின் தரம் மற்றும் பிற ஆதாரங்களிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கழிவுகளுக்கான தரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்தல்.
 • குடிமுறை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீரை சிறந்த முறையில் பொருளாதார ரீதியாக உகந்த வழியில் சுத்திகரிப்பு செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
 • குடிமுறை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரினை விவசாய பயன்பாட்டுக்கு என்று உள்ளாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல்.
 • குடிமுறை கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரினை நிலத்தில் வெளியேற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல்.
 • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து, நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்க, கட்டுப்படுத்த மற்றும் குறைப்பது சம்பந்தமான திட்டங்களில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
 • நீர் மாசுபடுதலை தடுத்தல், கட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தலுக்குரிய ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவற்றிக்கு ஊக்கம் அளித்தல்.
 • தொழிற்சாலை அமையும் இடத்தில் நீர்நிலைகள் அல்லது காற்று மாசு ஏற்படக்கூடுமாயின் அது பற்றிய அறிவுரைகளை மாநில அரசுக்கு அளித்தல்.
 • வாரிய செயல்பாடுகளை சீரியமுறையில் மேற்கொள்ளுவதற்கும் மற்றும் நீர்நிலைகளின் நீர் மாதிரிகள், வடிகால் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கும் ஆய்வகங்கள் அமைத்தல் அல்லது ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்.
 • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில அரசு குறிப்பிடும் பிற பணிகளையும் நிறைவேற்றுதல்.