தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

காற்றின் தன்மை கண்காணிப்பு

நகர்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகளிலிருந்து, வெளியேறும் வாயுக் கழிவுகளினாலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் மிக அதிகமான புகையினாலும் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசடைகிறது. காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981ன்படி தமிழ்நாடு மாநிலம் முழுவதும் காற்று மாசு கட்டுப்பாடு பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணித்தல்

தேசிய காற்று மண்டல கண்காணிப்பு திட்டத்தின் கீழ் (தே.கா.ம.க.தி) சென்னை நகரில் எட்டு இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, தூத்துக்குடியில் மூன்று இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, கோவையில் மூன்று இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, சேலத்தில் ஒன்று இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, மதுரையில் மூன்று இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, திருச்சியில் ஐந்து இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, கடலூரில் மூன்று இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது மற்றும் மேட்டூரில் இரண்டு இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்விடங்களில் வாரம் இருமுறை 24 மணி நேரமும் கண்காணிப்பு நடத்தி, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 10 மைக்ரானுக்கும் குறைந்த சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள், 2.5 மைக்ரானுக்கும் குறைந்த சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள், சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன்டை ஆக்சைடுகள் போன்ற வாயுக் கழிவுகளின் அளவுகள் கண்டறியப்படுகிறது. தூய்மையான காற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தேசிய தரக்கட்டுப்பாட்டு அளவுகோல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி கழிவுகளின் வருடாந்திர சராசரி தர அளவுகள் (மைக்ரோ கிராம்/கனமீட்டர்)
சல்ஃபர் டை ஆக்சைடு நைட்ரஜன் டை ஆக்சைடு சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள்
தொழிற்சாலைப் பகுதி குடியிருப்பு, கிராமம் மற்றும் பிற பகுதிகள் 50 40 60

இத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களும், வாரமிருமுறை 24 மணி நேரமும் இயங்குகின்றன. சுவாசிக்கும் போது உட்செல்லக்கூடிய மிதக்கும் தூசுகள் (10 மைக்ரானுக்கு குறைந்தவை) சல்ஃபர்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு போன்ற வாயுக்கள் இந்த நிலையங்கள்மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள்

வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 கத்திவாக்கம் தொழிற்சாலைப் பகுதி
2 மணலி தொழிற்சாலைப் பகுதி
3 திருவொற்றியூர் தொழிற்சாலைப் பகுதி
4கீழ்ப்பாக்கம் வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கப் பகுதி
5 தி.நகர் வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கப் பகுதி
6 நுங்கம்பாக்கம் வியாபாரம் மற்றும் வாகனப் புழக்கப் பகுதி
7 அண்ணாநகர் குடியிருப்புப் பகுதி
8 அடையார் குடியிருப்புப் பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 இராஜா ஏஜென்சீஸ் தொழிற்சாலை பகுதி
2 சிப்காட் தொழிற்சாலை பகுதி
3 ஏ.வி.எம். கட்டிடம் குடியிருப்பு பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வணிக பகுதி
2 பொன்னையா ராஜபுரம் குடியிருப்பு பகுதி
3 சிட்கோ கட்டிடம் தொழிற்சாலை பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 சௌடேஸ்வரி கல்லூரி கலப்பு குடியிருப்பு பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 ஹோட்டல் தமிழ்நாடு கலப்பு குடியிருப்பு பகுதி
2 பிச்சை பிள்ளை சாவடி தொழிற்சாலை பகுதி
3 பிர்லா விருந்தினர் மாளிகை வணிக பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 தென்னுர் குடியிருப்பு பகுதி
2 மெயின் கார்டு கேட் போக்குவரத்துப் பகுதி
3 பிஷப் ஹீபர் கல்லூரி எளிதில் பாதிக்கக்கூடிய பகுதி
4 பொன்மலை குடியிருப்பு பகுதி
5 மத்திய பேருந்து நிலையம் போக்குவரத்துப் பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 ஈச்சங்காடு கிராமம் குடியிருப்பு பகுதி
2 மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் வியாபாரப் பகுதி
3 சிப்காட் தொழிற்சாலை பகுதி
வ. எண் கண்காணிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் நில பயன்பாடு
1 இராமன் நகர் குடியிருப்பு பகுதி
2 சிட்கோ தொழிற்சாலை பகுதி