பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை

>>    மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-யை அறிவிக்கை செய்துள்ளது. சமீபத்திய ஆண்டு அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சி, 121 நகராட்சி மற்றும் 528 பேரூராட்சிகளிலிருந்து நாளொன்றுக்கு உருவான பிளாஸ்டிக் கழிவுகள் சுமார் 1178 டன்கள் ஆகும். இதில் 96 சதவீத கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கும், மேலும் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிப்பதற்கும் அனுப்பப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 13 - ன் படி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வாரியத்திட்ம் அங்கீகாரம் பெற்று இயங்க வேண்டும். இதன்படி, வாரியம், 230 பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கும், 27 மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கும், அங்கீகாரம் வழங்கியுள்ளது. வாரியம் படிவம் 6-ல் வருடாந்திர அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சமர்ப்பித்து வருகின்றது

தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அறிவிப்பு

>>    தமிழகஅரசு, 25.06.2018 நாளிட்ட அரசாணை எண் 84ல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடிமன் வரைமுறையின்றி பயன்படுத்த தடை அறிவித்து 01.01.2019 முதல் அமலில் வந்தது. இத்தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்தது. அந்த நடவடிக்கைகளில், மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள், மாவட்டந்தோறும் பெருந்திரள் விழிப்புணர்வு பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்பு பதாகைகள் நிறுவுதல் முதலியன உள்ளடங்கியுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருளாக வாழையிலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், அலுமினியத்தாள், தாமரை இலை, மூங்கில்/மரம்/மண்பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித/துணி கொடிகள், உண்ணக்கூடிய தேக்கரண்டிகள், துணி/காகிதம்/சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் குவளைகள் முதலியவற்றை பயன்படுத்தவும் அது சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாரியத்தால் நடத்தப்பட்டது . பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தும் பொருட்டும் மற்றும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் படியும், தமிழக அரசு மீண்டும் 05.06.2020 நாளிட்ட அரசாணை எண் 37-ல் ""உற்பத்தி பகுதிகளில் பேக்கிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பைகள்"" (primary packaging) மீதும் தடை விதித்தது. இத்தடை ஆணையை மீறும் தொழிற்சாலைகள் மீது வாரியம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 115 தொழிற்சாலைகளை மூடுவதற்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது

திருத்தியமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2021

>>    ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், 12,08,2021 அன்று திருத்தியமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2021யை அறிவிக்கை செய்தது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்களான 100 மைக்ரான்கனுக்கு குறைவான பிளாஸ்டிக்/பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாற பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள் (ear buds with plastic sticks), அலங்காரத்திற்கான தெர்மோகோல் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள் (candy sticks), ஜஸ்கிரீம் குச்சிகள் (ice-cream sticks), பலுான்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள் (plastic sticks for balloons) முதலியவை 01.07.2022 முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் 60 கிராம்/சதுர மீட்டர் (gsm) அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் (non-woven plastic carry bags) 30/09/2021 முதலும் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31/12/2022 முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை

மாவட்ட வாரியாக பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலைகள்

வ.எண் மாவட்டம் பார்க்க
1. அரியலூர் பார்க்க
2. செங்கல்பட்டு பார்க்க
3. சென்னை பார்க்க
4. கோயம்புத்தூர் பார்க்க
5. கடலூர் பார்க்க
6. தருமபுரி பார்க்க
7. திண்டுக்கல் பார்க்க
8. ஈரோடு பார்க்க
9. கள்ளக்குறிச்சி பார்க்க
10. காஞ்சிபுரம் பார்க்க
11. கன்னியாகுமரி பார்க்க
12. கரூர் பார்க்க
13. கிருஷ்ணகிரி பார்க்க
14. மதுரை பார்க்க
15. மயிலாடுதுறை பார்க்க
16. நாகப்பட்டினம் பார்க்க
17. நாமக்கல் பார்க்க
18. நீலகிரி பார்க்க
19. பெரம்பலூர் பார்க்க
20. புதுக்கோட்டை பார்க்க
21. இராமநாதபுரம் பார்க்க
22. ராணிப்பேட்டை பார்க்க
23. சேலம் பார்க்க
24. சிவகங்கை பார்க்க
25. தென்காசி பார்க்க
26. தஞ்சாவூர் பார்க்க
27. தேனி பார்க்க
28. தூத்துக்குடி பார்க்க
29. திருச்சிராப்பள்ளி பார்க்க
30. திருநெல்வேலி பார்க்க
31. திருப்பத்தூர் பார்க்க
32. திருப்பூர் பார்க்க
33. திருவள்ளூர் பார்க்க
34. திருவண்ணாமலை பார்க்க
35. திருவாரூர் பார்க்க
36. வேலூர் பார்க்க
37. விழுப்புரம் பார்க்க
38. விருதுநகர் பார்க்க

>>    Centralized EPR portal: https://eprplastic.cpcb.gov.in/#/plastic/home

>>    Meendum Manjappai: https://tnpcb.gov.in/meendummanjappai/

footer images