>> மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் சூழல் பருவமாறுபாடு அமைச்சகம், கட்டுமானம் மற்றும் இடிமான கழிவு மேலாண்மை விதிகள் 2016யை அறிவிக்கை செய்துள்ளது. கட்டுமான செயல்களின் போது உண்டாகும் கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக பிரத்தியேகமாக இவ்விதிகள் புதிதாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்விதிகள் தனி நபர் அல்லது நிறுவனம் அல்லது குழுமம் மூலம் மேற் கொள்ளப்படும் கட்டிடம் கட்டுமானம், பழுது பார்த்தல், இடித்தல் போன்ற செயல்களிலிருந்து வெளியேற்றப்படும் கட்டுமான பொருட்கள், இடிமான கழிவுகள் ஆகியவற்றை மேலாண்மை செய்வதற்கு பொருந்தும். உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமானம் மற்றும் இடிமானம் கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் கழிவுகளை மறுசுழற்சி செய்ய தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்கி, விதிகளை சரியான முறையில் அமல்படுத்துகின்றார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016