நிறுவன அமைப்பு

நிறுவன அமைப்பு

>>    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிறுவன அமைப்பு, தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், மாவட்ட அலுவலகம்,ஆய்வக அலுவலகம் என மூன்று அடுக்குகளாக செயல்பட்டு வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட அலுவலகம் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் தலைமையில் வாரிய குழுவால் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது. வாரிய தலைமை அலுவலகத்தின் செயல் பாட்டு பிரிவுகளாக திட்டம் மற்றும் வளர்ச்சி பிரிவு, நிர்வாக பிரிவு, தொழிற்நுட்ப பிரிவு, நிதி மற்றும் கணக்கு பிரிவு, உள்தணிக்கை, சட்டப்பிரிவு, கட்டுமான பிரிவு, குறை தீர்ப்பு மையம், இணைய வழி கண்காணிப்பு மையம் மற்றும் ஆய்வகம் ஆகியவனவாகும். இப்பிரிவுகளின் தலைமை அலுவலர்கள் உறுப்பினர் செயலரின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை திருநெல்வேலி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன, 38 மாவட்டங்களில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.மேலும் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும், 8 மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன.

வாரிய விளக்கப்படம்

about image
about image
footer images