தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம்

முன்னுரை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு பகுதியான சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம் டேனிஷ் உதவியுடன் 1994ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கி வருகின்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் தலைமையில் இயங்கும் வழிகாட்டும் குழுவால் இப்பயிற்சி நிலையம் வழிநடத்தப்படுகிறது. இக்குழுவில் அரசு அலுவலர்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், மற்றும் தொழிற்சாலைகளின் தலைமை நிர்வாகிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் தொழிற்சாலைகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய தொழில் நுட்ப குழு பயிற்சி நிலையத்திற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குகின்றது.

சுற்றுச்சூழல் பயிற்சி நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரிவோர், தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு கீழ்க்கண்ட நோக்கங்களை அடைய பயிற்சி அளித்தல் ஆகும்.

அனைத்து நிலையிலும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

சுற்றுச்சூழல் மற்றும் நீடித்து நிலைக்கும் வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையினை அறிமுகப்படுத்துதல்.

நீடித்து நிலைக்கும் வளர்ச்சியை அடையும் பொருட்டு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் மற்றும் மேலாண்மைக்கான கொள்கைகள், அடிப்படை கோட்பாடு மற்றும் வழிமுறைகளைஆகியவற்றை அறிமுகப்படுத்துதல்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அரசு சாரா நிறுவனங்கள் வாயிலாக ஏற்படுத்துதல்.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் நகர்ப்புற மக்களிடையே சுற்றுச்சூழல் கெடுவதால் ஏற்படும் அபாயத்தை, மற்றும் வாழ்க்கைத் தரம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

மாசினை துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தும் பொருட்டு தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட மாற்று நடைமுறைகளை செயலாக்குதல். புதுப்பிக்க முடியாத வள ஆதாரங்களைப் பாதுகாத்தல், வள ஆதாரங்களின் இயல்பு நிலை மீட்பு, மறுசுழற்சி மற்றும் குறைந்த கழிவுப்பொருள் வெளியேற்றம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் போது சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த திறமையை மேம்படுத்துதல்.

சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தாம் அறிந்த செய்தியை வெளிப்படுத்தும் திறமையை மேம்படுத்துதல்.